சென்னை ஏப்ரல், 6
தமிழ்நாட்டில் மினி லாக் டவுன் அமல்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கான அறிவிப்பு ஸ்டிக்கர் தொற்று பாதித்தோரின் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் ஒட்டப்படுகின்றன. தொற்று பாதித்தவர்கள் 14 நாட்கள் வரை வீட்டை விட்டு வெளியேறாமல் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறது.