துபாய் ஏப்ரல், 5
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய அரசின் சார்பில் துபாய் இந்திய துணைத் தூதரகமும் துபாய் தமிழ் சமூக அமைப்பான ஈமான் கலாச்சார மையம் இணைந்து வழங்கிய இஃப்தார் மற்றும் நல்லிணக்க கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாயில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் குரான் கிராத் ஓதி நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
மேலும் துபாய் இந்திய துணைத்தூதரகத்தின் தூதரக பொது அதிகாரி கவுன்சல் ஜெனரல் டாக்டர் அமன் புரி மற்றும் துபாய் ஈமான் தமிழ் சமூக அமைப்பின் தலைவர் பி,எஸ்,எம் ஹபிபுல்லா கான் தலைமையில், துணைத் தலைவர் ஏ,ஜே, கமால், பொதுச் செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையிலும்பொருளாளர் பிளாக் துலிப் யஹ்யா வாழ்த்துக்களோடு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய துணை தூதர் அமன்புரி, தூதரக அதிகாரிகள் ராம்குமார், காளிமுத்து, சித்தார்த், பல நாடுகளின் துணை தூதர்கள், அமீரகத்தின் முக்கிய பிரமுகர்களும் அதிகாரிகளும் மற்றும் அமீரக அரசின் உயர் அதிகாரிகளும், தொழில் அதிபர்களும் இதில் கலந்து சிறப்பித்துள்ளார்.
இந்நிகழ்வு இந்திய துணை தூதரகம் தமிழ் அமைப்பான துபாய் ஈமான் கலாச்சார மையமும் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சி இந்திய துணை தூதரக உயர் அதிகாரி ராம்குமார் மற்றும் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் தொழிலதிபர்கள் அதீப் குரூப் அன்சாரி, அபுதாபி ஐ எஸ் சி தலைவர் நடராஜன், டெக்டான் லட்சுமணன், சமூக ஆர்வலர் ஃபிர்தௌஸ் பாஷா, ஆபித் ஜுனைத், நஜ்மா அல் பரிதா அபுதாஹீர், வாழன் அசார், பிலாக் துளிப் இம்ரான், பவர் குரூப் அமீர் மற்றும் ஈமான் நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுச்செயலாளர் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளர் நஜீம் மரிக்கா, ஐடி செயலாளர் சமீர், நிர்வாகிகள் ஆயர்பாடி முஜீப், எஸ்பிஎஸ் நிசாம், அஸ்கர், இம்தாதுல்லா, ஷேக், ஜலாலுதீன், ஆலிம் முஹம்மது, ஜமீர் உள்ளிட்டோர் பணிகளை செய்தனர்.
ஈமான் அமைப்பு சமூக நல பணிகள் சிறப்பாக செயல்படுகிறது பல்வேறு நாடுகளின் தூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
M.நஜீம் மரைக்கா B.A.,/இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.