சென்னை மார்ச், 27
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நிதியமைச்சர் பி டி ஆர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு மறுநாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தினமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. இதில் பட்ஜெட் மீதான மூன்றாம் நாள் பொது விவாதம் தொடங்கும்.