திருப்பதி மார்ச், 26
திருப்பதி முதலாவது மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை மலைப்பாதையில் புதருக்குள் சிறுத்தை ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்த பக்தர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.