அரியலூர் மார்ச், 25
வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து 11 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஆஞ்சநேயர் சிலை அமெரிக்கன் கிறிஸ்டி அருங்காட்சியர் ஏலத்தில் மீட்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் நிபுணர்களின் உதவியுடன் அந்த சிலை ஆய்வு செய்யப்பட்டதில் அந்த உண்மை உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அமெரிக்க தூதரகம் மூலம் இந்திய தூதரகத்தில் அச்சிலை ஒப்படைக்கப்பட்டது.