Spread the love

கோவை மார்ச், 21

கோவை சிவானந்தா காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். கிராம கோவில் பூசாரிகள் பேரவை கோட்ட அமைப்பாளர் ஜெகநாதன் வரவேற்றார். விஷ்வ ஹிந்து பரிசத் கோவை கோட்ட தலைவர் ஹரி பிரசாத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை தெற்கு மாவட்ட அமைப்பாளர் கோவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார் சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தி.மு.க அரசு தன் தேர்தல் அறிக்கையில் 406-வது வாக்குறுதியாக கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளமாக ரூ. 2000 வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் இன்றுவரை நிறைவற்றப்படவில்லை. கிராம கோவில் பூசாரிகள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி மாத ஊக்கத்தொகை ரூ.10ஆயிரம் வழங்கப்பட வேண்டும். செயல்படாமல் முடங்கி கிடக்கும் கிராம கோவில் பூசாரிகள் நலவாரியத்தைச் சீர்படுத்தி, விரைவாகச் செயல்படுத்த வேண்டும். அனைத்து கிராமக் கோயில்களுக்கும் கட்டணமில்லாத மின்சாரம் வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகளின் மறைவிற்குப்பின் அவரது மனைவிக்கு அத்தொகை வழங்கப்பட வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *