Spread the love

துபாய் மார்ச், 20

ஐக்கிய அரபு அமீரக துபாயில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரையில் உள்ள பூத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தி வரும் பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் அதன் 19வது வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பூத்துறை பிரீமியர் லீக் (பிபிஎல்) நிகழ்ச்சி அதன் தலைவர் ஜாய் பிரான்சிஸ், செயலாளர் பிரவீன் ஜோய், காசாளர் ஷாஹின், கூட்டுத் தலைவர் சும்ஜின் டொனால்ட், இணைச் செயலாளர் சஜு, செயற்குழு உறுப்பினர்கள் ஆண்டனி, ஜெகன்.மார்ஷல், ஷாஜன் மற்றும் அனைத்து PWA உறுப்பினர்கள் சார்பில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல பிரபலமான சிறப்பு விருந்தினர்கள் கெல்வின் வர்கீஸ் – மூத்த இயக்குனர், லக்ரைம் வணிகக் குழு ஜெரோம் ஜோரில் ஃபேப்ரிகேஷன் மேலாளர், லாம்ப்ரெல், பால் பிரபாகர், ஈமான் பொதுச்செயலாளர் ஹமீத் யாசின் முனைவர் ஸ்ரீ ரோகினி, கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல் Spread Smiles,’s ஆர் ஜே சாரா, ஆர்ஜே அஞ்சனா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் எட்டு அணிகள் கலந்து கொண்ட சிறப்பு கால்பந்தாட்ட போட்டி, பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் அலைன் எப்சி முதலாவது பரிசையும், உம் அல் குவெயின் எப்சி இரண்டாவது பரிசையும் தட்டி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சங்கத்தின் முதன்மை நோக்கம் புலம்பெயர் மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பதுதான் என்றாலும், அதற்கு அப்பால் உதவுவதும் அதிகம். நிதி தேவை உள்ள ஏழை குடும்பங்களுக்கு உதவுதல் , கிராமத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை கண்டறிதல், கல்வி வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், பூத்துறை கிராம நலனில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவது குடிமை வசதிகள், கல்வி ஆதரவாக இருந்தாலும் PWA பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் முன்னணியில் உள்ளது.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *