வேலூர் ஆகஸ்ட், 13
நாட்டின் 75 வது சுதந்திர தின விழா 15 தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டு உள்ள இடங்களில் மூவர்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வேலூர் கோட்டையில் தேசிய கொடியின் மூவர்ணம் ஜொலிக்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காட்பாடி ரெயில் நிலையத்தில் 100 அடி கம்பம் புதிதாக அமைக்கப்பட்டு அதில் 20 அடி அகலம், 30 அடி நீளத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. நேற்று முதல் இந்த தேசிய கொடி 100 அடி கம்பத்தில் பட்டொளி வீசி பறக்கிறது