ராமநாதபுரம் மார்ச், 15
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் பனிக்கட்டி தொழிற்சாலை அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விருப்பமுள்ள மீனவ பயனாளிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04567-231402 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் அறிவித்துள்ளார்.