Spread the love

செங்கல்பட்டு மார்ச், 15

மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956-ம் நாளை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பெறுதல் வேண்டும் என்று அரசால் ஆணையிடப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 23.3.2023 முதல் 30.3.2023 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது.

ஆட்சிமொழி் சட்ட வாரவிழா கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்திடுவதற்கு வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழி திட்ட விளக்க கூட்டம், விழிப்புணர்வு பேரணி போன்றவை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு, வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள் பொதுமக்கள் என அனைவரும் ஆட்சிமொழி சட்ட வாரவிழா நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பியுங்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *