சென்னை பிப், 1
ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி https://tnadtwscholarship.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார் எண், இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, ஜாதி சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.