ராணிப்பேட்டை ஜன, 30
அரக்கோணம் அருகே இயங்கி வரும் இரும்பு கம்பி தயாரிக்கும் தொழிற்சாலையில் 30க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு மாதமாக ஊதியம் கொடுக்காமல் அடைத்து வைத்து குண்டர்களை வைத்து மிரட்டுவதாக இவர்களை வேலைக்கு அழைத்து வந்த நரசிம்ம கௌடா என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.