விழுப்புரம் ஜன, 29
விழுப்புரம்- கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன், துரை.ரவிக்குமார் பாராளுமன்ற உறுப்பினர், சட்ட மன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன், சிவக்குமார், மணிக்கண்ணன், சபாராஜேந்திரன் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.