கரூர் ஜன, 28
கரூரை சேர்ந்த பாம்பு பிடிவீரர்கள் மாசி, வடிவேல் இருவருக்கும் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த பேட்டி அளித்த அவர்கள் இருளர் சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது தமிழ்நாடு மட்டுமல்லாது பல நாடுகளிலும் பாம்பு பிடித்து வருகிறோம் ஏழ்மையில் இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.