தருமபுரி ஜன, 28
இந்திய திருநாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டலம் சார்பில் அலுவலக வளாகத்தில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய 32 ஓட்டுநர்கள், 30 நடத்துநர்கள், 18 தொழில்நுட்ப பணியாளர்கள், 5 அலுவலக பணியாளர்கள் 4 மேற்பார்வை யாளர்கள் மற்றும் 1 கிளை மேலாளர் என மொத்தம் 90 போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு பரிசுக ளையும் சான்றிதழ்களையும் மண்டல பொது மேலாளர் சு.ஜீவரத்தினம் வழங்கி கவுரவித்தார்.
இவ்விழாவில் துணை மேலாளர் ராஜராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, உதவி மேலாளர் புருசோத்தமன், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.