மதுரை ஜன, 27
ஐந்து முறை தமிழ்நாட்டை ஆண்ட கருணாநிதி தமிழ் வளர்ச்சிக்காக எந்த தியாகமும் செய்யவில்லை என செல்லூர் ராஜூ விமர்சனம் செய்தார். மதுரையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுக என்றாலே ஏமாற்றும் கட்சி தேர்தல் வரும் போதெல்லாம் சதுரங்க வேட்டை படத்தை பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். தமிழ் வளர்ச்சிக்காக தியாகம் செய்யக்கூடிய கட்சி அதிமுக மட்டுமே என அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.