மதுரை ஜன, 28
கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் ஜாதி,சமய பேதமின்றி இறந்த உடல்களை அடக்கம் செய்து மானுடம் காக்கும் மனிதநேய சேவையாற்றிய எஸ்டிபிஐ கட்சிக்கு நீதியரசர் ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் அறக்கட்டளையின் சார்பில் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் கோபால் விருதினை வழங்க SDPI மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் விருதினை பெற்றுக் கொண்டார். மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், மதுரை வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், மதுரை வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான், தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீத் ஆகியோர் உடன் இருந்தனர்.