சென்னை ஜன, 26
அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியிலிருந்து மேற்கொள்ள முடியாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கோவில் நிதியை பிற செலவுகளுக்கு பயன்படுத்துவதை எதிர்த்து தொடர் பட்ட வழக்கு விசாரணையில் கண்காணிப்பு என்ற பெயரில் கோவில் வளங்களை எடுக்க முடியாது, கோவில் நிதியை தேவையில்லாமல் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது. அறநிலையத்துறை செலவுகளுக்கு தொகுப்பு நிதியில் செலவழிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.