நல்லம்பள்ளி ஆகஸ்ட், 12
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மா.குட்டூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்து ஊர்வலம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலத்தில் வாணவேடிக்கையுடன், மேள வாத்தியங்கள் முழங்கப்பட்டன. நேற்று காளியம்மன், செல்லியம்மன், முத்துமாரியம்மன், சீலக்காரியம்மனுக்கு பக்தர்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து சென்று படைக்கும் நிகழ்ச்சி, மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது.