சென்னை ஜன, 24
தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னும் இடம் மாறுதல் விஷயத்தில் பதிவுத்துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இதனை கண்டித்து வரும் 28ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளவர்கள் மீதான விசாரணை விரைந்து முடிக்குமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.