அமெரிக்கா ஜன, 18
அவதார், அவதார் 2 மூலம் மேஜிக் சினிமாவை உருவாக்கிய ஜேம்ஸ் கேமரூன் அடுத்து அவதார் 3 வர உள்ளதாக அறிவித்துள்ளார். பண்டோராவின் உலகத்தில் நடக்கும் கதையின் மூலம் முதல் பாகம் காட்டிலும், இரண்டாம் பாகம் நீரிலும், படமாக்கப்பட்டது. மூன்றாம் பாகம் முக்கியமாக அக்னியை மையமாக கொண்டிருக்கும். இதில் மேலும் இரண்டு விஷயங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 2024 இல் வெளியாக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.