சீனா ஜன, 17
சீனாவின் கிழக்கு லியோனிங் மாகாணம் பான்ஜின் நகரில் இரசாயனங்களை உற்பத்தி செய்யும் ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீப்பிழம்பு எழுந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது. வெடி விபத்தால் ஆலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பணியில் இருந்த பலர் ஈடுபாடுகளில் சிக்கினர். இதில் ஐந்து பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். சிலரை காவல்துறையினர் இன்னும் தேடி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.