சென்னை ஜன, 17
காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மக்கள் குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்களுக்கு வருவார்கள். சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள், வண்டலூர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.