கர்நாடகா ஜன, 17
கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்னும் மூன்று மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட சர்வேயில் பாஜக பெரும் பின்னடைவு சந்திக்கும் காங்கிரஸ் கை ஓங்கும் என தெரியவந்துள்ளது. இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து குஜராத் ஃபார்முலாவை கையில் எடுத்து தோல்வி முகம் மற்றும் இழப்பறியில் உள்ளவர்களுக்கு பதில் இளம் வயதினருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க பாஜக திட்டமிட்டுள்ளது.