திருமலை ஜன, 16
திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக திருப்பதியில் நேரடி தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் விரைவாக ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கின்றனர். மேலும் சுப்ரபாத சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.