சாகர் ஜன, 15
மத்திய பிரதேசம் சாகர் நகரில் நாய் வளர்ப்பவர்களுக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய்கள் பொது இடங்களில் அசுத்தம் செய்வதால் அனைத்து வார்டுகளிலும் வளரும் நாய்களின் உரிமையாளர்களுக்கு வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணைய தெரிவித்துள்ளார். வரி விதிப்பதாக இருந்தால், நாய்களுக்கு பூங்கா ஒதுக்கி தர வேண்டும் என நாய் வளர்ப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.