திருப்பூர் ஜன, 14
தமிழகத்தின் சிறந்த காவல் நிலையமாக திருப்பூர் வடக்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வழக்குகளை விரைந்து முடிப்பது, புகார் கொடுக்க வருபவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது, உள்ளிட்டவைகளை வைத்து ஏடிஜிபி தலைமையிலான குழு ஆய்வு செய்தது. அதில் திருப்பூர் வடக்கு காவல் நிலையம் முதலிடத்தையும் திருச்சியில் உள்ள கோட்டை காவல் நிலையம் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர்.