புதுடெல்லி ஜன, 14
கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பே கிடையாது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். பொதுவாக சொத்து என இருந்தால் அதற்கு மதிப்பு இருக்கும் ஆனால் கிரிப்டோவுக்கு அது கிடையாது அவற்றின் சந்தை மதிப்பு உயர்வது போல் ஒரு கற்பனை கற்பனையான விஷயத்தை உருவாக்கப்படுகிறது. இதன் மதிப்பு எல்லாமே 100% ஊகமே தவிர வேறொன்றுமில்லை வெளிப்படையாக சொன்னால் இதுவும் ஒரு வகை சூதாட்டம் என தெரிவித்துள்ளார்.