கள்ளக்குறிச்சி ஜன, 9
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோ ட்டை பகுதி யில் கனரக லாரி ஒன்றில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எலவனாசூர்கோட்டை காவல் துணை ஆய்வாளர் திருமாள் தலைமையில் தனிப்படை காவல் துறையினர் உளுந்தூர்பேட்டை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரியை காவல் துறையினர் மடக்கி சோதனை செய்ததில் 16 டன் ரேஷன் அரிசி 280 மூட்டைகளில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. உடனே காவல் துறையினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.