துபாய் ஜன, 8
ஐக்கிய அரபு அமீரகத்தில் முக்கிய பிரமுகர்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகதை சேர்ந்த நடிகையும் மற்றும் டிவி தொகுப்பாளியான DD என்ற அழைக்கப்படும் திவ்ய தர்ஷினிக்கு ஐக்கிய அமீரகத்தின்கோல்டன் விசா வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை Spread Smile’s மக்கள் ஆர்ஜே சாரா ஒருங்கிணைப்பில் ECH டிஜிட்டல் குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இக்பால் மார்க்கோனி தலைமையில் செயல்பாடு நிர்வாக இயக்குனர் அப்துல்ரஹ்மான் முன்னிலையில் கேக்வெட்டி சிறப்பானமுறையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தமிழ் வார இதழ் வணக்கம் பாரதம் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, கேப்டன் டிவி முதன்மை நிருபர் கமால் கேவிஎல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் ECH டிஜிட்டல் நிறுவன நிர்வாகிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.