துபாய் ஜன, 8
ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் உள்ள அன்னபூர்ணா உயர்தர சைவ உணவகத்தின் மேல்மாடியில் உள்ள நிகழ்ச்சி அரங்கில் புனித மக்காவிற்கு செல்லும் உம்ரா பயணத்திற்கான தமிழ் முறை வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை ஜாபிர் தொகுத்து வழங்க அபுல்ஹசன் வரவேற்புரை நடத்தினார். மெளலவி M.S. செய்யது சுலைமான் நூரி உம்ராவின் சம்பந்தமாக சிறப்புரை நிகழ்த்தினார். மெளலவி Y.S. முஹம்மது ஸாதிக் ரஹ்மானி உம்ரா செய்வதற்கான முறைகள் மற்றும் விளக்க உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கிரீன் குளோபல் நிறுவனத்தின் நிறுவனர் சமூகசேவகி முனைவர் ஜாஸ்மின், வணக்கம் பாரதம் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, மீடியா 7 முஹம்மது அஸ்கர் அலி மற்றும் தேவிபட்டினம் எஸ்பிஎஸ் நிஜாம், க்ரீன் குளோப் அபூபக்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் கிபி ஹஜ் மற்றும் உம்ரா சர்வீஸ் நிறுவனத்தின் மூலமாக இந்த மாதத்தில் உம்ரா செல்லக்கூடிய 40 நபர்கள் கலந்து கொண்டு அதன் வழிமுறைகளை கேட்டு பயன்பெற்றனர்.
மௌலவி முஹம்மது சுலைமான் அரூஸி நன்றியுரை நிகழ்த்தி இரவு உணவு உபசரிப்புடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.