சென்னை ஜன, 8
ரேஷன் பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாத ரேஷன் அட்டைதாரர்கள், வேறு நபர்கள் மூலம் பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ‘அங்கீகார சான்று’ என்று குறிப்பிட்டு உணவு பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில் விபரங்களை குறிப்பிட்டு கையெழுத்திட்டு, அந்த நபரிடம் கொடுக்க வேண்டும் அவர் அந்த சான்று ரேஷன் கடையில் காண்பித்து பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.