கடலூர் ஜன, 7
பண்ருட்டி காவல் துணை ஆய்வாளர் தங்கவேல் பயிற்சி பெற்ற விஜி பண்ருட்டி கும்பகோணம் ரோட்டில் மகேஷ் பேக்கரி எதிரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டி அவுலியா நகர் சேர்ந்த ஷேக் அப்துல்லா (46) என்பவர்தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற குற்றத்திற்காக அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.