புதுடெல்லி ஜன, 7
இ-காமெர்ஸ் நிறுவனமான அமேசான் பணிநீக்கம் ஆயிரம் இந்திய ஊழியர்களை பாதித்துள்ளது. உலகம் முழுவதும் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அமேசான் நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்தது. தற்போது இந்தியாவில் ஒரு லட்சம் ஊழியர்கள் பணி புரிகின்றனர். அதாவது இதில் ஒரு சதவீத ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். இம்மாதம் 18 ம் தேதி முதல் பணி நீக்கம் குறித்து ஊழியர்களுக்கு அந்நிறுவனம் தெரிவிக்கவுள்ளது.