புதுடெல்லி ஜன, 8
அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்ச நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புகையிலைப் பொருட்களின் வரியை உயர்த்த அரசு சாரா நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதை ஏற்று புகையிலைப் பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து வித புகையிலை பொருட்களின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.