புதுடெல்லி ஜன, 6
வாரணாசியில் இருந்து வங்காளதேசம் வழியாக அஸ்ஸாமின் திப்ருகர் வரை செல்லும் உலகின் மிக நீண்ட தூர சொகுசு கப்பலை சுற்றுலாவை பிரதமர் மோடி ஜனவரி 13ம் தேதி தொடங்கி வைக்கிறார். 50 நாட்கள் நடைபெறும் இந்த சுற்றுலாவில் உலக பாரம்பரிய தலங்களாக அடையாளப்படுத்தப்பட்டவை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க முடியும். 18 கேபின்களுடன் நவீன வசதியுடன் இந்த கப்பல் உள்ளது.