ஜம்மு காஷ்மீர் ஜன, 5
சில நாட்களாக காஷ்மீர் பூஞ்ச், ராஜோரி ஆகிய மாவட்டங்களில் தீவிரவாத தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்களும் பலியாகினர். இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் நேற்று ஆலோசனை நடத்தியது. இதையடுத்து தீவிரவாத தாக்குதலை சமாளிக்க 1800 சி ஆர் பி எஃப் வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பி உள்ளதாக உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.