புதுடெல்லி ஜன, 5
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கும் மூன்று நாட்கள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றுகிறார். வளர்ச்சியடைந்த இந்தியா, கடைசி மைல்கல்லை அடைதல், ஜிஎஸ்டி மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் சவால்கள் மற்றும் இந்தியாவின் பதில் ஆகிய மூன்று சிறப்பு அமர்வுகள் மாநாட்டில் நடத்தப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.