நெல்லை ஜன, 3
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னார்கோவிலில் உள்ள மாவட்டத்தின் பிரசித்திபெற்ற ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று ஷஅதிகாலை 4 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து பெருமாளுக்கு, மாலை சிறப்பு அபிஷேகம், ஆராதனையைத் தொடர்ந்து மாலை சுமார் 5.30 மணி அளவில் சேஷ வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி கோவிலில் உலா வந்தார்.
தொடர்ந்து பரமபத வாசல் திறப்பு எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறந்தையடுத்து பெருமாளை திருவாய் மொழி மண்டபத்திற்கு கருடர் எதிர் கொண்டு அழைத்து வந்தார். அங்கு பெருமாள் குலசேகர ஆழ்வாருக்கு காட்சியளித்தார்.
சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் அம்பை கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், கடையம் உள்ளிட்ட இடங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை.