கிருஷ்ணகிரி ஜன, 1
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள அறையில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக கைத்தறி துறை அமைச்சர் காந்தி, ஆட்சியர் ஜெயசந்திரபானுரெட்டி மற்றும் அதிகாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்ட்டில் சென்றனர். அங்குள்ள மற்றொரு லிப்ட்டில் பொதுமக்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் சென்றனர். அந்த லிப்ட் 2-வது தளத்தை அடைந்ததும் திடீரென பழுதாகி நின்றது. மேலும் லிப்ட்டின் கதவும் திறக்கவில்லை. இதனால் லிப்ட்டில் இருந்த பயனாளிகள் 7 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் லிப்ட்டில் இருந்தவாறு கதவை தட்டி சத்தம் போட்டனா். கதவை உடைத்தனர்.
இதே போல அடிக்கடி பழுதாகி விடுவதாகவும், கதவுகள் திறப்பதில்லை என்றும் பொதுமக்கள் பலரும் புகார் தெரிவித்தனர். இந்த 2 லிப்டுகளையும் முறையாக பராமரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.