நெல்லை டிச, 31
நெல்லை மாவட்டம் அம்பையில் இருந்து பாபநாசம் செல்லும் பிரதான சாலையில் தற்போது விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அம்பை அடுத்த சிவந்திபுரம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மின்மாற்றி திடீரென சாலையில் சாய்ந்து, அங்கு இயங்கி கொண்டிருந்த ஜே.சி.பி. மீது விழுந்தது. உடனடியாக சுதாரித்து கொண்ட டிரைவர் வெளியே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது, பின் மின்சார துறையினர் மின்மாற்றியை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில், சாலை விரிவாக்கத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் விரிவாக்கத்திற்காக மின்மாற்றி வேறு இடத்தில் அமைத்த நிலையில், அங்கு இயங்கி கொண்டிருந்த ஜே.சி.பி. இயந்திரம் மின்மாற்றியை தாங்கி பிடித்து கொண்டிருந்த கம்பியில் பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சாய்ந்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக பிரமுகர் மீது வேரோடு மரம் சாய்ந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஜான் பீட்டர்.
நிருபர்.
நெல்லை மாவட்டம்.