சென்னை டிச, 28
பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்கப்படாததால் ஆவினில் 100 மில்லி லிட்டர் நெய் பாட்டில்கள் தேக்கம் அடைந்துள்ளன. நடப்பாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 100 மில்லி லிட்டர் ஆவின் நெய் இடம்பெற்றது. அதேபோல் அடுத்த ஆண்டும் வழங்கப்படும் என அதிக அளவில் மேம்பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் நெய் பாட்டில் இடம்பெறவில்லை. இதனால் ஒரு கோடிக்கும் மேல் 100 மில்லி லிட்டர் நெய் பாட்டில்கள் தற்போது தேக்கம் அடைந்துள்ளன.