நெல்லை டிச, 27
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டுபன்றி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன, இந்த நிலையில் அம்பை அடுத்த மணிமுத்தாறு 80 அடி கால்வாய் பகுதியிலுள்ள பொட்டல் என்ற கிராமத்தின் அருகே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தந்தத்துடன் கூடிய ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றித்திரிந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு அடிவாரப்பகுதிக்கு வந்த அந்த காட்டுயானை அப்பகுதியிலுள்ள பனைமரங்களை தின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 30 அடி உயரம் கொண்ட பனைமரத்தை வேரோடு பிடுங்கிய போது பனைமரம் அருகில் சென்ற மின்சார வயரில் பட்டு, மின்வயர் கீழே விழுந்தது.
அப்போது எதிர்பாராத யானை அந்த மின்வயரில் மிதித்ததாக கூறப்படுகிறது, இதில் மின்சாரம் தாக்கியத்தில் அந்த காட்டு ஆண் யானை பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதுகுறித்து அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின் பேரில் அம்பை வனச்சரகர் நித்யா மற்றும் அம்பை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பல்பீர் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து யானைகள் மின்சாரம் தாக்கியும், ரயில் மோதியும் இறந்து வருவது வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.