ராணிப்பேட்டை டிச, 25
காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் மற்றும் அத்திப் பட்டு ஆகிய 2 ஊராட்சிகள் உள்ளது. இப்பகுதிகளிலிருந்து காஞ்சீபுரம், அரக்கோணம், திருத்தணி, காவேரிப் பாக்கம், சுமைதாங்கி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பாற்கடல் பாலாற்றின் குறுக்கே ரூ.48 கோடி மதிப்பீட்டில், 1,345மீட்டர் நீளத்திற்கு கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் மெய்யழகன் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஓச்சேரி பாலாஜி, பேரூராட்சி செயலாளர் நரசிம்மன் உட்பட பலர் உடன் இருந்தனர்.