அரியலூர் டிச, 25
திருமானூர் மற்றும் கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளுக்கு ஆட்சியர் ரமணசரஸ்வதி சென்று, பொருள்களின் இருப்பு, குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, இருப்பு பதிவேடு, பணியாளர் வருகை பதிவேடு, பொருள்களின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.