புதுடெல்லி டிச, 21
தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை விரைவில் கொடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான கேள்விக்கு ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு 17,176 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் உள்ளது. அதில் தமிழ்நாட்டின் நிலுவைத் தொகை 1200 கோடி மட்டுமே அவை விரைவில் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் என்றார்.