புதுச்சேரி டிச, 21
அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் தமிழக பாடத்திட்டத்திற்கு பதிலாக சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சேர அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர விரும்பும் பள்ளிகள் நாளைக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.