கடலூர் டிச, 19
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேலூர் கிராமத்தில் முறையாக கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தராமல் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் நிற்பதாகவும் பலமுறை இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அங்கு தேங்கி நிற்கும் கழிவு நீர்களால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது என கூறினர்.
எனவே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் வேப்பூர் -பெண்ணாடம் சாலையில் வேப்பூரில் இருந்து பெண்ணாடம் நோக்கி சென்ற அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.