கேரளா டிச, 19
கேரளாவில் சமீப காலமாக பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கோட்டையம் பகுதியில் நோய் பாதிப்பால் இதுவரை 7000 வாத்துக்கள் அழைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுப்புறத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருக்கும் பறவைகளை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல் பாதிக்கப்பட்ட பகுதியில் பறவைகளை ஏற்றி செல்வதற்கும் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். வாத்துகள் அழிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.