சென்னை டிச, 17
பிரபலங்களே சூதாட்டத்தை ஊக்குவிப்பது வேதனை அளிக்கிறது என நடிகர் ராஜ்கிரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர் சீட்டுக்கட்டு விளையாடுபவர்கள் பணத்திற்காக எந்த வித கீழ்நிலைக்கும் செல்வார்கள் என கூறினார். ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் 37 உயிர்கள் பறி கொடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி உள்ள அவர், அரசு தடை சட்டம் போட்டும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.